×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை அகற்றம்..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது. ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவதால் கனகசபை மீது ஏறி 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் வைத்த அறிவிப்பு பலகையால் சர்ச்சை ஏற்பட்டது. பக்தர் ஒருவர் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்த போது அவருடன் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கனகசபை மீது ஏறி எல்லோருக்கும் வழிபட உரிமை உள்ளது என கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது.

தமிழ்நாடு அரசின் ஆணையை மீறி கனகசபை மீது ஏறி வழிபடக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கக் கூடாது என அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். எச்சரிக்கையை மீறி கனகசபை மீது வைத்த அறிவிப்பு பலகையை அகற்றச் சென்ற அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் ஏற்கனவே தகராறில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிதம்பரம் கனகசபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

சர்ச்சையை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் அறிவிப்பு பலகையை அகற்றினர். அறிவிப்பு பலகையை அகற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கனகசபையில் ஏறி வழிபட தடை விதித்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையானது தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு எதிரானது என்பதால் அகற்றப்பட்டது.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை அகற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Chidambaram Nataraja Temple ,Kanakasabha ,Cuddalore ,Kanaka Sabha ,Ani Thirumanjana Festival ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...